/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தாய்ப்பால் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் மாணவிகள் அபாரம்தாய்ப்பால் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் மாணவிகள் அபாரம்
தாய்ப்பால் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் மாணவிகள் அபாரம்
தாய்ப்பால் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் மாணவிகள் அபாரம்
தாய்ப்பால் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் மாணவிகள் அபாரம்
ADDED : ஆக 06, 2011 01:56 AM
திருநெல்வேலி : நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மகப்பேறு வார்டில் நர்ஸிங் மாணவிகள் தாய்ப்பால் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.உலகம் முழுவதும் தாய்ப்பால் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரம் தாய்ப்பால் வாரவிழா கொண்டாடப்படுகிறது.
விழாவையொட்டி குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிப்பதன் முக்கியத்துவம், தாய்ப்பால் அளிப்பதால் குழந்தைகள், தாய்மார்கள் பெறும் பயன்கள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு, பயிற்சி முகாம்கள், கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி (ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரி) மகப்பேறு பிரிவில் கடந்த 1ம்தேதி தாய்ப்பால் வார விழா துவங்கியது. குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்கத்தலைவர் டாக்டர் முகமதுதம்பி, டாக்டர் ராஜேஷ், மருத்துவக்கல்லூரி குழந்தைகள் மருத்துவ பேராசிரியர்கள் டாக்டர்கள் கதிர் சுப்பிரமணியன், தேவிகலா பேசினர்.தொடர்ந்து தாய்ப்பால் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள், நர்ஸிங் மாணவிகளுக்கு தாய்ப்பால் குறித்து குவிஸ் போட்டி, படம் வரையும் போட்டி நடந்தது.ஐந்தாம் நாளான நேற்று தாய்ப்பால் விழிப்புணர்வை வலியுறுத்தி நர்ஸிங் மாணவிகள் நாடகம், இசை, கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். கவிதை வாசிக்கப்பட்டது. மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தது. குழந்தைகள் மருத்துவ பேராசிரியர் டாக்டர் ராஜ ராஜேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இன்று பட்டிமன்றம் நடக்கிறது. நாளை நிறைவு விழா நடக்கிறது.ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் டாக்டர் செந்தில்குமரன் மற்றும் குழுவினர் செய்துள்ளனர்.