/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பி.கே.பி. ஸ்பின்னிங் மில் துவக்க விழாபி.கே.பி. ஸ்பின்னிங் மில் துவக்க விழா
பி.கே.பி. ஸ்பின்னிங் மில் துவக்க விழா
பி.கே.பி. ஸ்பின்னிங் மில் துவக்க விழா
பி.கே.பி. ஸ்பின்னிங் மில் துவக்க விழா
ADDED : ஜூலை 11, 2011 02:53 AM
தர்மபுரி: தர்மபுரியில், பி.கே.பி. ஸ்பின்டெக்ஸ் ஸ்பின்னிங் மில் துவக்க
விழா நடந்தது.தர்மபுரி குண்டலப்பட்டியில், பி.கே.பி. குரூப் நிறுவனங்களின்
சார்பில், பி.கே.பி.ஸ்பின்டெக்ஸ் ஸ்பின்னிங்மில்ஸ் நிறுவப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவில், அதிநவீன தொழில்நுட்பத்துடனும், முற்றிலும் குளிர்சாதன
வசதியுடனும் அமைக்கப்பட்டுள்ளது.பி.கே.பி.குரூப் நிறுவனங்களின் சேர்மன்
பவுன்ராஜ், திலகவதிபவுன்ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். நிர்வாக இயக்குனர்
ரமேஷ் வரவேற்றார். தொழிலதிபர் குப்புசாமி, லட்சுமிஅம்மாள் ஆகியோர்
குத்துவிளக்கேற்றி மில்லை திறந்து வைத்தனர்.தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர்
பழனியப்பன், காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு, பா.ம.க., மாநில தலைவர் மணி,
முன்னாள் எம்.பி., தீர்த்தராமன், டி.ஐ.ஜி., பொன்மாணிக்கவேல், எம்.எல்.ஏ.,
பாஸ்கர், மாவட்ட காங்., தலைவர் பாலகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட
செயலாளர் அன்பழகன், டிஎன்சி குரூப் நிறுவனங்களின் தலைவர் இளங்கோவன்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, வாழ்த்து செய்தி
அனுப்பியுள்ளார்.ஏற்பாடுகளை, பி.கே.பி. நிறுவன தலைவர் பவுன்ராஜ்,
விஜய்வெங்கட்ராமன், சத்யா, கார்த்திக் இளங்கோவன், டாக்டர் சரண்யா, டாக்டர்
நவீனா, கவிதாரமேஷ் மற்றும் ஊழியர்கள் செய்தனர்.