Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/டேவிஸ் கோப்பை: இந்திய ஜோடி வெற்றி

டேவிஸ் கோப்பை: இந்திய ஜோடி வெற்றி

டேவிஸ் கோப்பை: இந்திய ஜோடி வெற்றி

டேவிஸ் கோப்பை: இந்திய ஜோடி வெற்றி

ADDED : செப் 18, 2011 01:10 AM


Google News
Latest Tamil News
டோக்கியோ : டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின், இரட்டையர் போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா ஜோடி வெற்றி பெற்றது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், இந்தியா-ஜப்பான் அணிகளுக்கு இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ், உலக சுற்றுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள், நடக்கிறது. முதல் நாளில் நடந்த இரண்டு ஒற்றையர் போட்டியிலும், இந்திய வீரர்கள் சோம்தேவ்தேவ்வர்மன், ரோகன் போபண்ணா தோல்வியடைந்தனர். இதனால்இந்திய அணி 0-2 என பின் தங்கியிருந்தது.

பூபதி ஜோடி: நேற்று இரட்டையர் பிரிவு போட்டிகள் நடந்தன. இதில்இந்தியாவின் மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா ஜோடி, ஜப்பானின் சுகிடா, டட்சுமா ஜோடியை சந்தித்து. முதல் செட்டை இந்திய ஜோடி 7-5 என வென்றது. அடுத்த செட்டை 6-3 என கைப்பற்றி, ஜப்பான் ஜோடிபதிலடி கொடுத்தது. அடுத்த இரு செட்களில் எழுச்சி பெற்ற இந்திய ஜோடி 6-3, 7-6 என்ற கணக்கில் கைப்பற்றியது. முடிவில் 7-5, 3-6, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் இந்தியாவின் பூபதி, போபண்ணா ஜோடி வெற்றி பெற்றது. இருப்பினும் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இன்று நடக்கும் இரண்டு மாற்று ஒற்றையர் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே,இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us