/உள்ளூர் செய்திகள்/தேனி/உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுச்சாவடிகளில் ஆய்வுஉள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுச்சாவடிகளில் ஆய்வு
உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுச்சாவடிகளில் ஆய்வு
உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுச்சாவடிகளில் ஆய்வு
உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுச்சாவடிகளில் ஆய்வு
ADDED : ஜூலை 27, 2011 10:38 PM
தேனி : உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள ஓட்டுச்சாவடிகளின் அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு நடத்துகின்றனர்.
தமிழக உள்ளாட்சித்தேர்தல் அக்டோபரில் நடக்க உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. வார்டுகள் பிரிக்கும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், வார்டு வாரியாக வாக்காளர்பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள ஓட்டுச்சாவடிகளின் நிலை, அவற்றில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிடம், மின் விளக்கு வசதிகள் உள்ளனவா, கட்டடங்கள் நல்ல நிலையில் உள்ளனவா,மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா, என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர், உதவி நிர்வாக பொறியாளர்களை கொண்ட குழுவினர், சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்கின்றனர்.