அதிகாரிகள் சும்மா மிரட்டினாலே போதும் பணத்தை கட்டிவிடுவேன்: நடிகர் திலீப் உறுதி
அதிகாரிகள் சும்மா மிரட்டினாலே போதும் பணத்தை கட்டிவிடுவேன்: நடிகர் திலீப் உறுதி
அதிகாரிகள் சும்மா மிரட்டினாலே போதும் பணத்தை கட்டிவிடுவேன்: நடிகர் திலீப் உறுதி
கொச்சி : ''வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு தடவை சும்மா போனில் மிரட்டினாலே போதும்.
வருமான வரித்துறையின் 150வது ஆண்டு நிறைவு விழா, கேரள மாநிலம் கொச்சியில் நடந்தது. விழாவில், மலையாள திரைப்பட நடிகர் திலீப் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்,''சில ஆண்டுகளுக்கு முன் வரை மிமிக்ரி கலைஞனாக இருந்தேன். அப்போதெல்லாம் வருமான வரி என்றால் என்ன என்று கூட தெரியாது. திரைப்பட துறையைச் சேர்ந்தவர்கள் பொதுவாக யாரும் பிரச்னை உருவாக்க மாட்டார்கள். கணக்குகளில் போதுமான அனுபவம் இல்லாததால் தான் நடிக, நடிகையருக்கு பல முறை தவறுகள் ஏற்படுகிறது. அதிகாரிகள் ஒரு தடவை சும்மா போனில் அழைத்து மிரட்டினாலே போதும். நான் அலுவலகத்திற்கு ஓடி வந்து பணத்தை கட்டி விடுவேன். அதற்காக வருமான வரித்துறையினர் வீடு தேடி வரவேண்டிய அவசியமிருக்காது,'' என்றார்.
மலையாள திரைப்பட பிரபலங்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் வீடுகளில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தியதை தொடர்ந்து நடந்த விழாவில் தான். மற்றொரு பிரபலமான திலீப் இவ்வாறு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவை, கேரள மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதி ஜெ.செலமேஸ்வர் துவக்கி வைத்தார். வருமான வரித் துறை இயக்குனர் ஜெனரல் லூகோஸ், கொச்சி வருமான வரித் துறை முதன்மை கமிஷனர் கே.மாதவன் நாயர் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.