ADDED : ஜூலை 30, 2011 12:54 AM
விழுப்புரம் : ஊராட்சி தலைவர் கொலை மிரட்டல் விடுத்ததாக ஊராட்சி வார்டு உறுப்பினர் புகார் கொடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி தாலுகா எலவடி ஊராட்சி வார்டு உறுப்பினர் லட்சமணன் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில், எலவடி ஊராட்சி நிர்வாகத்தில் முறைகேடு நடந்ததாக கடந்தாண்டு செப்டம்பரில் கலெக்டரிடம் மனு கொடுத்தேன். அதன்பேரில் மாவட்ட ஊராட்சி அலுவலர்கள் ஊராட்சியில் ஆய்வு செய்ததில் 6 மாதம் வரவு-செலவு கணக்கு எழுதப்படாமல் பணம் கையாடல் செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஊராட்சி தலைவர் பெரியண்ணன், துணை தலைவர் சின்னத்தம்பி, உதவியாளர் பாலு, மக்கள் நலப்பணியா ளர் வத்சலா சேர்ந்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.