/உள்ளூர் செய்திகள்/தேனி/கொட்டக்குடி ஆற்றுப்பகுதியில் ரூ.96லட்சத்தில் தடுப்பணைகொட்டக்குடி ஆற்றுப்பகுதியில் ரூ.96லட்சத்தில் தடுப்பணை
கொட்டக்குடி ஆற்றுப்பகுதியில் ரூ.96லட்சத்தில் தடுப்பணை
கொட்டக்குடி ஆற்றுப்பகுதியில் ரூ.96லட்சத்தில் தடுப்பணை
கொட்டக்குடி ஆற்றுப்பகுதியில் ரூ.96லட்சத்தில் தடுப்பணை
ADDED : ஜூலை 14, 2011 11:57 PM
போடி : கொட்டகுடி ஆற்றுப்பகுதியில் 96 லட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்பணை அமைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளதாக அமைச்சர் ஓ.
பன்னீர் செல்வம் தெரிவித்தார். போடி குரங்கனி- கொட்டகுடி ஆற்றுப்பகுதியிலிருந்து வரும் நீரை போடி பரமசிவன் கோயில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு சப்ளை செய்யப்படுகின்றனர். மழைக்காலங்களில் கொட்டகுடி ஆற்றுப்பகுதியிலிருந்து வெளியேறும் நீரை சேமிக்க முடியாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் போடி நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி, குடிநீர் ஆதாரத்தை பெருக்கிட கொட்டகுடி ஆற்றுப் பகுதியிலிருந்து வரும் நீரை சேமிக்கும் வகையில் தடுப்பணை அமைக்கப்படுகிற. போடி புதூர்-வலசத்துறை ஆற்றுப்பாலம் அருகே 96 லட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டும் வகையில் பொதுப்பணித்துறை மூலம் டெண்டர் விடப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் துவங்க உள்ளது என அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.