அவிநாசி : அவிநாசியில் ஸ்ரீநிவாச கல்யாண மங்கல மஹோத்சவம் மற்றும் 340ம் ஆண்டு ஸ்ரீராகவேந்திர சுவாமி ஆராதனை விழா நடந்தன.அவிநாசியிலுள்ள சூலூர் சுப்பராவ் சத்திரத்தில் நடந்த அவ்விழாவில், ஸ்ரீநிவாச மூர்த்திக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, சீர்வரிசையுடன் கல்யாண மங்கல மஹோத்சவம் நடந்தது.
முன்னதாக, வேதபாட சாலை மாணவர்களின் வேத கோஷம் நடந்தது.ஸ்ரீராகவேந்திர சுவாமியின் 340ம் ஆண்டு ஆராதனை விழா நடந்தது. பஜனை பாடல்கள் இசைக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடந்தன. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.அவிநாசி வியாசராஜ பஜனை மண்டலி அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.