/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பாலிடெக்னிக் கல்லூரி வகுப்பு துவக்க விழாபாலிடெக்னிக் கல்லூரி வகுப்பு துவக்க விழா
பாலிடெக்னிக் கல்லூரி வகுப்பு துவக்க விழா
பாலிடெக்னிக் கல்லூரி வகுப்பு துவக்க விழா
பாலிடெக்னிக் கல்லூரி வகுப்பு துவக்க விழா
ADDED : ஜூலை 15, 2011 12:50 AM
நாமக்கல்: பொட்டிரெட்டிப்பட்டி, ரெங்கேஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
நாமக்கல், பொட்டிரெட்டிப்பட்டியில் உள்ள ரெங்கேஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா நேற்று நடந்தது. திருச்சி, சிவானி கல்விக் குழும தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். கல்வி நிறுவன தலைவர் ரெங்கசாமிபிள்ளை முன்னிலை வகித்தார். திருச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்.பி., கலியமூர்த்தி, முதலாமாண்டு வகுப்புகளை துவக்கி வைத்து பேசினார். விழாவில், முதலாம் ஆண்டு கல்லூரிக்கு வரும் மாணவ, மாணவியருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் ராஜசேகரன், இணைச் செயலாளர் சசிக்குமார், செயலாளர் பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.