Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/சிறுமி கற்பழித்து கொலை : சி.பி.ஐ., விசாரணைக்குஉத்தரவிட மத்திய அரசுக்கு உ.பி., அரசு கோரிக்கை

சிறுமி கற்பழித்து கொலை : சி.பி.ஐ., விசாரணைக்குஉத்தரவிட மத்திய அரசுக்கு உ.பி., அரசு கோரிக்கை

சிறுமி கற்பழித்து கொலை : சி.பி.ஐ., விசாரணைக்குஉத்தரவிட மத்திய அரசுக்கு உ.பி., அரசு கோரிக்கை

சிறுமி கற்பழித்து கொலை : சி.பி.ஐ., விசாரணைக்குஉத்தரவிட மத்திய அரசுக்கு உ.பி., அரசு கோரிக்கை

ADDED : செப் 14, 2011 06:29 AM


Google News

லக்னோ:உ.பி., மாநிலத்தில், போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், 14 வயது சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.

ஐ., விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, மத்திய அரசுக்கு உ.பி., அரசு கடிதம் அனுப்பியுள்ளது.உ.பி., மாநிலம், நிக்ஹாசன் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள மரத்தில், தூக்கில் தொங்கிய நிலையில், 14 வயது சிறுமியின் உடல், கடந்த ஜூன் மாதம் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனையில், அந்தச் சிறுமி கற்பழிக்கப்பட்டும், மூச்சுத் திணறல் காரணமாகவும் இறந்தது தெரியவந்தது.



இது தொடர்பாக, நிக்ஹாசன் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த, 3 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், அங்கு பணிபுரிந்த காவல் துறை கண்காணிப்பாளர், வட்டார அலுவலர் உட்பட, அனைவரும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, சம்பவத்தில் தொடர்புடைய 3 போலீசாருக்கு எதிராக, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கோரி, உ.பி., அரசு, மத்திய அரசுக்கு நேற்று கடிதம் அனுப்பியது.

இதுகுறித்து, அம்மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,' மாநில போலீசின் விசாரணையின் போது, குற்றவாளிகள் தங்கள் செல்வாக்கால் வழக்கிலிருந்து தப்பிவிட வாய்ப்புள்ளது. எனவே, அவர்களின் மீது உறுதியான நடவடிக்கை தேவை என்பதற்காக, சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது' என, குறிப்பிடப்பட்டுள்ளது.



உத்திரப்பிரதேச மாநிலத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக, எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். 14 வயது சிறுமி கற்பழித்துக் கொல்லப்பட்டதற்கு, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,வான புரு÷ஷாத்தம் திவேதியும், அவரது ஆதரவாளர்களும் காரணம் என புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, திவேதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க வலியுறுத்தி, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்று, இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்று, நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us