இரவில் ஒளிரும் மின்மினிப்பூச்சிகள்
இரவில் ஒளிரும் மின்மினிப்பூச்சிகள்
இரவில் ஒளிரும் மின்மினிப்பூச்சிகள்
ADDED : ஜூலை 29, 2011 11:08 PM
கூடலூர் : பகலில் பார்க்க முடியாத சின்னஞ்சிறு மின்மினிப்பூச்சி (பிளானட் மோத்), தேக்கடி வனப்பகுதியில் மட்டும் பட்டாம்பூச்சி வடிவில் மிகப்பெரியதாக இரவு நேரத்தில் பறக்கின்றன.கடந்த சில நாட்களாக குமுளியில் இருந்து தேக்கடி செல்லும் ரோட்டின் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்த மின்மினிப்பூச்சி (பிளானட் மோத்) இரவு நேரத்தில் ஒளியை வெளிப்படுத்தி பறந்த வண்ணம் உள்ளது.
பட்டாம்பூச்சி வடிவில் மிகப்பெரிய அளவிலான இந்த பறக்கும் பூச்சி, தேக்கடி வனப்பகுதியில் மட்டுமே அதிகம் இருப்பதாகவும், கொய்யா மரங்களின் இலைகளை அதிகம் ருசித்து சாப்பிடும் எனவும் கேரள வனத்துறையினர் தெரிவித்தனர்.