/உள்ளூர் செய்திகள்/திருச்சி/முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை கோலாகலம் வயலூரில் மயில் வாகனத்தில் ஸ்வாமி உலாமுருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை கோலாகலம் வயலூரில் மயில் வாகனத்தில் ஸ்வாமி உலா
முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை கோலாகலம் வயலூரில் மயில் வாகனத்தில் ஸ்வாமி உலா
முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை கோலாகலம் வயலூரில் மயில் வாகனத்தில் ஸ்வாமி உலா
முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை கோலாகலம் வயலூரில் மயில் வாகனத்தில் ஸ்வாமி உலா
ADDED : ஜூலை 26, 2011 12:28 AM
திருச்சி: ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது.
வயலூர் முருகன் கோவிலில் வெள்ளி மயில் வாகனத்தில் ஸ்வாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். கிருத்திகை எனப்படும் கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்தவர் முருகப்பெருமான். சூரபத்மனை அழிப்பதுக்காக, சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து கிளம்பிய ஆறு தீப்பொறிகளில் தோன்றிய கார்த்திகேயனை, ஆறு கார்த்திகை பெண்கள் சீராட்டி வளர்த்தனர். கார்த்திகை பெண்களின் பெருமையை போற்றும் வகையில் கிருத்திகை (கார்த்திகை) விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரம் பிரசித்தி பெற்றது. ஆடிக்கிருத்திகை அன்று, தடைகளை தகர்த்தெறியும் முருகனுக்கு, காவடிகள், அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் செய்வது முருகப் பக்தர்களின் வழக்கம். ஆடிக்கிருத்திகையொட்டி, திருச்சியில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. குமார வயலூர் முருகன் கோவிலில் நேற்று அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 11 மணிக்கு பால் காவடி, அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இரவு 8 மணிக்கு, வெள்ளி மயில் வாகனத்தில் சிங்கார வடிவேலர் எழுந்தருளி வீதியுலா வந்தார். இரவு 10.30 மணிக்கு பிரயாச்சித்த அபிஷேகம், அர்த்த ஜாம பூஜை நடந்தது. அதுவரை நடை திறந்திருந்தது. பக்தர்களின் வசதிக்காக, சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கருணாகரன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.திருவானைக்கோவில் பாலதண்டாயுதபாணி, மேலக்கொண்டயம்பேட்டை சுக்ரான் கோவில், ஜங்ஷன் வழிவிடு முருகன் கோவில் உள்ளிட்ட திருச்சியில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று ஆடிக்கிருத்திகை விழா சிறப்பாக நடந்தது.விராலிமலை முருகன் கோவில், புதுக்கோட்டை குமரமலை முருகன் கோவில் உள்ளிட்ட சிறப்புமிக்க மலைக்கோவில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.