/உள்ளூர் செய்திகள்/கடலூர்/உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு எம்.பி., செம்மலை பெற்றார்உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு எம்.பி., செம்மலை பெற்றார்
உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு எம்.பி., செம்மலை பெற்றார்
உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு எம்.பி., செம்மலை பெற்றார்
உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு எம்.பி., செம்மலை பெற்றார்
ADDED : செப் 04, 2011 11:07 PM
கடலூர் : கடலூரில், அ.தி.
மு.க., சார்பில் உள் ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் எம்.பி., செம்மலை மனுக்கள் பெற்றார். கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு பெறுதல் கடந்த 2ம் தேதி கடலூர் டவுன்ஹாலில் துவங்கியது. நகராட்சி, பேரூராட்சி தலைவர், கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேற்று முன்தினம் வரை 455 பேர் விருப்ப மனு அளித்தனர். மூன்றாம் நாளான நேற்று எம்.பி., செம்மலை விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டார். அமைச்சர் சம்பத், முன்னாள் எம்.எல்.ஏ., அய்யப்பன், நகர செயலர் குமார், தொகுதி செயலர் சுப்ரமணியன், ஒன்றிய செயலர்கள் பழனிச்சாமி, முத்துக்குமாரசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.