சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் மோசமான நாடுகளின் பட்டியல்: எந்த இடத்தில் இந்தியா!
சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் மோசமான நாடுகளின் பட்டியல்: எந்த இடத்தில் இந்தியா!
சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் மோசமான நாடுகளின் பட்டியல்: எந்த இடத்தில் இந்தியா!
UPDATED : ஜூன் 16, 2024 08:07 PM
ADDED : ஜூன் 16, 2024 07:58 PM

புதுடில்லி : சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் மோசமான ஐந்து நாடுகள் என வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்து உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த யேல் மற்றும் கலிபோர்னியா பல்கலைகழக ஆராய்ச்சியாளர்களால் தயாரிக்கப்பட்ட 180 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 176 வது இடத்தை பிடித்துள்ளது.
கடந்த 2000-2012 ஆண்டு கால கட்டங்களில் இந்தியாவின் நிலை 122 மற்றும் 127 ஆக இருந்த நிலை 2014-ம் ஆண்டில் இருந்து சரிய தொடங்கியது. இதன்படி 2018-ல் 177, 2020-ல் 168, 2022-ல் 180, 2024-ல் 176 ஆக உள்ளதாக தெரிவித்து உள்ளது.
2024-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவை காட்டிலும் மோசமாக நிலைகளை கொண்டநாடுகளாக பாகிஸ்தான், மியான்மர், லாவோஸ், மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சுற்றுச்சூழல் உயிர்சக்தி போன்றவற்றில் இந்தியா குறைந்த மதிப்பெண்களை பெற்ற போதிலும், வனப்பாதுகாப்பு தொடர்பானவற்றில் சிறந்த மதிப்பெண்களை பெற்றுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வளரும்நாடுகளில் நிதி மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை, விதிகளை அமல்படுத்துவதில் கடினம் போன்றவற்றால் செயல்திறன் குறைவதாக தெரிவித்து உள்ளது.
சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு பட்டியலில் 34-வது இடத்தை அமெரிக்கா பிடித்துள்ளது. டென்மார்க் நாடு முதலிடத்தை பிடித்துள்ளது.