பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.14 ரூபாய் உயர்வு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.14 ரூபாய் உயர்வு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.14 ரூபாய் உயர்வு
UPDATED : செப் 15, 2011 06:36 PM
ADDED : செப் 15, 2011 05:34 PM
புதுடில்லி: பெட்ரோல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.14 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வின் காரணமாக மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய்.71.68 ஆகவும், சென்னையில் ரூபாய். 70.64 ஆகவும், கோல்கட்டாவில் ரூபாய்.71.15 ஆகவும், டில்லியில் ரூபாய்.66.84 ஆகவும் விற்கப்படும். பெட்ரோல் விலை குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், தினந்தோறும் பெட்ரோல் லிட்டருக்கு 2.61 ரூபாய் இழப்பு ஏற்படுவகிறது. ஒரே நாளில் 15 கோடி ரூபாய் அளவு வரை விற்கும் போதும் இழப்பு ஏற்படுகிறது. வாட் வரி அல்லது விற்பனை வரி காரணமாக சர்வதேச அளவுக்கு பெட்ரோல் விலையை உள்நாட்டில் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக கூறினார். கடந்த 4 மாதங்களில் தற்போது 2வது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மே 15ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட மாற்றங்களே விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.


