/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ப்ளஸ் 2 மாணவியை டூவீலரில்கடத்த முயன்ற கொத்தனார் கைதுப்ளஸ் 2 மாணவியை டூவீலரில்கடத்த முயன்ற கொத்தனார் கைது
ப்ளஸ் 2 மாணவியை டூவீலரில்கடத்த முயன்ற கொத்தனார் கைது
ப்ளஸ் 2 மாணவியை டூவீலரில்கடத்த முயன்ற கொத்தனார் கைது
ப்ளஸ் 2 மாணவியை டூவீலரில்கடத்த முயன்ற கொத்தனார் கைது
ADDED : செப் 08, 2011 12:04 AM
திருச்சி: திருச்சி அருகே ப்ளஸ் 2 மாணவியை வலுகட்டாயமாக டூவீலரில் கடத்திச்
செல்ல முயன்ற கொத்தனாரை போலீஸார் கைது செய்தனர்.திருச்சி மாவட்டம்
திருவெறும்பூர் கக்கன் காலனியைச் சேர்ந்தவர் செல்வம் (30). இவருக்கு
திருமணமாகி சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது. மனைவி தற்போது
திருவெறும்பூர் இந்திராநகரில் உள்ள தனது தாய்வீட்டில் இருக்கிறார்.
அவரையும், குழந்தையையும் பார்க்க செல்வம் அடிக்கடி அங்கு சென்று
வந்துள்ளார்.அப்போது, எதிர்வீட்டில் ப்ளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவர்
இருந்துள்ளார்.
அவரிடம் செல்வம் மாமியார் வீட்டுக்கு போகும்பேது எல்லாம்
பேசியுள்ளார். மாணவி சகஜமாக பேசியதால், செல்வம் அவர் மீது ஒரு கண்
வைத்துள்ளார்.கடந்த இரண்டு நாட்களுக்கு முன், இரவு ஏழு மணியளவில் செல்வம்
தனது மாமியார் வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது,
ப்ளஸ் 2 மாணவி தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.அவரை தனது
ஹோண்டா டூவீலரில் வருமாறு செல்வம் அழைக்கவே, அவர் மறுத்து விட்டார்.
ஆயினும் அந்த மாணவியை வலுக்கட்டாயமாக டூவீலரில் ஏற்றிச் சென்றுள்ளார்.
டூவீலர் வீட்டுக்கு செல்லாமல், காட்டு வழிப்பாதையில் சென்றுள்ளது.
இதையடுத்து செல்வத்தின் தவறான நோக்கத்தை புரிந்து கொண்ட மாணவி, ஓடும்
டூவீலரிலிருந்து கீழே குதித்து விட்டார்.கீழே குதித்ததில் மாணவியின் உடலில்
காயங்கள் ஏற்பட்டுள்ளது. பற்கள் உடைந்துள்ளது. கீழே விழுந்த மாணவியை
அக்கம்பக்கத்தார் ஓடிவந்து காப்பாற்றி வீட்டில் கொண்டு போய்
சேர்த்துள்ளனர்.மாணவியின் பெற்றோர் திருவெறும்பூர் போலீஸில் செல்வத்தின்
நடத்தை குறித்து புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீஸார் கொத்தனார்
செல்வத்தை கைது செய்தனர்.