/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் ஆன்லைனில் "அப்டேட்'வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் ஆன்லைனில் "அப்டேட்'
வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் ஆன்லைனில் "அப்டேட்'
வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் ஆன்லைனில் "அப்டேட்'
வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் ஆன்லைனில் "அப்டேட்'
ADDED : செப் 07, 2011 10:46 PM
ராமநாதபுரம் : வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் 'ஆன்லைனில் அப்டேட்' செய்ய தேர்தல் அலுவலர்களுக்கு, தமிழகம் முழுவதும் ஒன்பது இடங்களில், பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. இதில் வாக்காளர் பட்டியல் வார்டு, ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆன்லைனில் உள்ள வாக்காளர் பட்டியல் விபரம், சட்டசபை தொகுதி வாரியாக உள்ளது. இதை தற்போது வார்டு வாரியாக பிரித்து வைத்துள்ளனர். இவற்றை தமிழக தேர்தல் ஆணையத்தின் வெப்சைட்டில் ஏற்றுவதற்கான பயிற்சி, அந்தந்த மாவட்ட தேசிய தகவல் மையம் (என்.ஐ.சி.,) அதிகாரிகளுக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம், நேற்று முன்தினம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இவர்கள் மாவட்ட வாரியாக உள்ள அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். தமிழகம் முழுவதும் ஒன்பது இடங்களில் இந்த பயிற்சி நடக்கிறது. இதில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி சார்பில் தலா இரண்டு பேர் பயிற்சி பெற உள்ளனர். ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகரில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், தேர்தல் உதவியாளர்களுக்கு 'ஆன்லைனில் அப்டேட்' செய்வது உள்ளிட்ட பயிற்சிகள் இன்றும் நாளையும் (செப்., 7, 8ம் தேதி) சிவகங்கையில் அளிக்கப்பட உள்ளது.