/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தாறுமாறாக உறிஞ்சப்படும் நிலத்தடி நீர்தாறுமாறாக உறிஞ்சப்படும் நிலத்தடி நீர்
தாறுமாறாக உறிஞ்சப்படும் நிலத்தடி நீர்
தாறுமாறாக உறிஞ்சப்படும் நிலத்தடி நீர்
தாறுமாறாக உறிஞ்சப்படும் நிலத்தடி நீர்
ADDED : செப் 03, 2011 01:55 AM
புதுச்சேரி : 'நிலத்தடி நீரை தொழிற்சாலைகள் தாறுமாறாக உறிஞ்சுவதை அரசு கண்காணிப்பது கிடையாது' என, அன்பழகன் எம்.எல்.ஏ., கூறினார்.'நிலத்தடி நீரை அதிகப்படியாக உறிஞ்சுவதால், கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்புத்தன்மையாக மாறுவது' குறித்து சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானத்தை அன்பழகன் எம்.எல்.ஏ., நேற்று கொண்டு வந்தார்.வேளாண் அமைச்சர் சந்திரகாசு: புதுச்சேரியில் எதிர்கால நீர் வளத்தை நிர்வகிக்க, உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தபட்டு வரும் நீரியல் திட்டம் 2ன் கீழ், ரூ.13 கோடி செலவில் பணிகள் நிறைவுபெறும் நிலையில் உள்ளது.
லாஸ்பேட்டையில் ரூ.2.50 கோடியில் நீராதார தகவல் மையம் மற்றும் நீர் பரிசோதனை மையம் ஏற்படுத்த கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் வளம், தரத்தைக் கண்காணிப்பதைத் தீவிரப்படுத்தும் வகையில், 35 சோதனை குழாய் கிணறுகள் கூடுதலாக அமைக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியின் வடமேற்குப் பகுதியில் நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்தும் நோக்கில் ஒரு கோடி ரூபாய் செலவில் ஆராய்ச்சிப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீர் வளத்தையும், அதன் தன்மையையும் மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இதன்மூலம் நிலத்தடி நீர் வளம் பெருக வாய்ப்புண்டு. நிலத்தடி நீரில் ஊடுருவிய கடல் நீர் மேலும் பரவாமல் சாத்தியக்கூறு ஏற்படும். அன்பழகன்: நிலத்தடி நீர் தொடர்ந்து உறிஞ்சப்படுவதால், கடல் நீர் உட்புகுந்து கடற்கரையிலிருந்து 8.கி.மீ., தூரத்திற்கு நிலத்தடி நீர் முற்றிலும் மாசடைந்துவிட்டது. நிலத்தடி நீரைப் பாதுகாக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.நிலத்தடி நீரை தாறுமாறாக உறிஞ்சுவதை, நிலத்தடி நீர் பாதுகாப்பு ஆணையம் கண்காணிக்கவில்லை. இந்நிலை நீடித்தால், எதிர்காலத்தில் குடிநீருக்கு வேறு மாநிலத்தை நம்பியிருக்கும் சூழ்நிலை ஏற்படும். நூறு ஆண்டுகளுக்கு முன் நீர் ஓடிய ஆற்றுப் பகுதிகளைக் கண்டறிந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலத்தடி நீரைப் பாதுகாக்கலாம்.தமிழகத்தில் நிலத்தடி நீரைப் பாதுகாக்க, மழை நீர் சேகரிப்புத் திட்டத்தைச் சட்டமாகக் கொண்டு வந்துள்ளனர். மழை நீர் சேகரிப்பு அமைப்பு இருந்தால்தான் வீடு கட்ட அனுமதி வழங்கப்படும். அதுபோல, புதுச்சேரியிலும் மழை நீர் சேகரிப்பு சட்டம் கொண்டு வர வேண்டும்.அமைச்சர் சந்திரகாசு: நடவடிக்கை எடுக்கப்படும்