Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தேயிலை பிரச்னையை கண்டுகொள்ளாத தி.மு.க., : உணவுத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

தேயிலை பிரச்னையை கண்டுகொள்ளாத தி.மு.க., : உணவுத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

தேயிலை பிரச்னையை கண்டுகொள்ளாத தி.மு.க., : உணவுத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

தேயிலை பிரச்னையை கண்டுகொள்ளாத தி.மு.க., : உணவுத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

ADDED : ஆக 09, 2011 12:13 AM


Google News
Latest Tamil News

மஞ்சூர் : ''கடந்த தி.மு.க., ஆட்சியில், தேயிலை பிரச்னை குறித்து கண்டு கொள்ளவில்லை'' என, உணவுத்துறை அமைச்சர் புத்திசந்திரன் குற்றம் சாட்டினார்.



நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகேயுள்ள, எடக்காடு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில், அங்கத்தினர்கள் சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாநில உணவுத்துறை அமைச்சர் புத்திசந்திரன் பேசுகையில், 'தி.மு.க., ஆட்சியில், தேயிலை பிரச்னை குறித்து கண்டுகொள்ளாததால், விவசாயிகள் பல்வேறு இன்னலுக்கு ஆளாயினர்.

தேயிலை விவசாயம் மேற்கொண்ட பலர், வேலை தேடி கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற ஓரிரு மாதங்களில், தேயிலை விவசாய நிர்வாகிகளை, முதல்வர் நேரடியாக அழைத்து, பிரச்னை குறித்து கேட்டறிந்தார். முதல்வரின் உத்தரவுப்படி, தற்போது, கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை அங்கத்தினர்களுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஒரு நாள் ஊதியத்தில் 50 ரூபாய் உயர்த்தி, இந்த மாதத்திலிருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us