காங்., முன்னாள் எம்.பி., மீது நிலமோசடி புகார்
காங்., முன்னாள் எம்.பி., மீது நிலமோசடி புகார்
காங்., முன்னாள் எம்.பி., மீது நிலமோசடி புகார்
ADDED : ஜூலை 19, 2011 12:41 PM
கரூர்: கரூரில் நில மோசடியில் ஈடுபட்டதாக, முன்னாள் எம்.பி., குறித்து, எஸ்.பி.,யிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கருணாநிதி மற்றும் ராஜேந்திரன். இவர்களுக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில், இரண்டே கால் ஏக்கர் நிலம் விற்றது போக மீதமுள்ள 75 சென்ட் நிலத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் மாவட்ட எஸ்.பி., நாகராஜை சந்தித்து அளித்த புகாரில், கரூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.பி., நாட்ராயன் மற்றும் அவரது மகன் பிரபு ஆகியோர் தங்களது 75 சென்ட் நிலத்தை அபகரிக்க முயல்வதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இப்புகார் குறித்து நிருபர்களிடம் பேசிய முன்னாள் எம்.பி., நாட்ராயன், தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், இருவரும் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் அந்த நிலத்தை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாகவே தான் விலைக்கு வாங்கிவிட்டதாகவும், நில மதிப்பு உயர்ந்துள்ளதையடுத்து, பணம் கேட்டு தன்னை இருவரும் மிரட்டுவதாகவும் தெரிவித்தார்.


