/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் வி.எஸ்.பி., இன்ஜி.,கல்லூரியில் மாணவருக்கான வேலை வாய்ப்பு கருத்தரங்கம்கரூர் வி.எஸ்.பி., இன்ஜி.,கல்லூரியில் மாணவருக்கான வேலை வாய்ப்பு கருத்தரங்கம்
கரூர் வி.எஸ்.பி., இன்ஜி.,கல்லூரியில் மாணவருக்கான வேலை வாய்ப்பு கருத்தரங்கம்
கரூர் வி.எஸ்.பி., இன்ஜி.,கல்லூரியில் மாணவருக்கான வேலை வாய்ப்பு கருத்தரங்கம்
கரூர் வி.எஸ்.பி., இன்ஜி.,கல்லூரியில் மாணவருக்கான வேலை வாய்ப்பு கருத்தரங்கம்
ADDED : ஜூலை 19, 2011 12:35 AM
கரூர்: கரூர் வி.எஸ்.பி., பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாண விகளுக்கு வேலை வாய்ப்புகளுக்கான சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. டி.சி.எஸ்., நிறுவனத்தின் ரீஜினல் ரெக்ரூட்மென்ட் தலைவர் ராம்குமார், விப்ரோ நிறுவன முதன்மை மேலாளர் விஸ்வநாதன், யு.எஸ்.டி. குளோபல் சர்வீஸ் நிறுவன தலைவர் குளோபல் கேம்பஸ் ரிலேஷன்ஸ் ரேகா மாத்யூஸ், சி.டி.எஸ்., நிறுவன தலைமை ஆரக்கில் டெஸ்டிங் பிராக்டிஸ் சதீஷ் ராஜாமணி ஆகியோர் பங்கேற்றனர். கருத்தரங்கில் ரீஜினல் ரெக்ரூட்மென்ட் தலைவர் ராம்குமார், நிறுவனத்தில் பணியாற்ற தேவையான ஏழு இன்றியமையாத தகுதிகளை பற்றி விவாதித்தார். நிறுவனத்தின் வேலைகளை பற்றியும், அவர்கள் பணியாளர்களுக்கு அளிக்கும் சலுகைகளை பற்றியும், மக்களுக்கு செய்யும் சேவைகள் பற்றியும் கூறினார். மேலும், மாணவர்களை தேர்வு செய்யும் முறைகளையும், எவ்வாறு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதனையும் வலியுறுத்தினார். இதுகுறித்து மாணவர்களுக்கான சந்தேகங்களை தெளிவுப்படுத்தினார்.
யு.எஸ்.டி.,குளோபல் சர்வீஸ் நிறுவனத்தார் ரேகா மாத்யூஸ், விஷன், மிஷன் பற்றியும், நிறுவனத்தின் வளர்ச்சியை பற்றியும் விவரித்தார். புதிய தலைமுறைகளை இன்று உலக அரங்கில் பல சவால்களை மன உறுதியோடு தன்னம்பிக்கையுடனும் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்றும், அதற்கு எப்படி தங்களை தொழில்நுட்ப கல்வியுடன் கூடிய நவீன மாற்றங்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் விளக்கினார்.