ADDED : ஜூலை 17, 2011 01:27 AM
கோத்தகிரி : கோத்தகிரியில் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
இதில், சங்க ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் சுரேஷ்பாபு மற்றும் சுரேஷ் ஆகியோர் புதிய தலைவர் குருமூர்த்தி மாதாகவுடர், செயலர் ஜெயரத்தினம் மற்றும் பொருளாளர் சாந்திராமு ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தனர். நிகழ்ச்சியில், ரமேஷ், சங்கர் மற்றும் பிரதீப் ஆகியோர் ரோட்டரி சங்கத்திற்கு தங்களை புதிய உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர். நடப்பாண்டில், சங்கம் மூலம் மருத்துவ முகாம், மரம் நடுதல், கல்வி உதவி தொகை, போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு உட்பட பல்வேறு சமூக பணிகள் மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது. இதில், ரோட்டரி சங்க முன்னாள் செயலர் விவேக் வரவேற்றார். முன்னாள் தலைவர் தேவராஜ் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க செயலர் ஜெயரத்தினம் நன்றி கூறினார்.