மருத்துவ பல்கலை துணைவேந்தர் மயில்வாகனனுக்கு புதிய பதவி
மருத்துவ பல்கலை துணைவேந்தர் மயில்வாகனனுக்கு புதிய பதவி
மருத்துவ பல்கலை துணைவேந்தர் மயில்வாகனனுக்கு புதிய பதவி
ADDED : ஜூலை 13, 2011 12:59 AM
சென்னை : எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன், பெங்களூரு ராஜிவ்காந்தி சுகாதார அறிவியல் பல்கலையின் புதிய துணைவேந்தரை, தேர்வு செய்வதற்கான ஆய்வுக் குழுவில், உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து, மருத்துவ பல்கலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூரு ராஜிவ்காந்தி சுகாதார அறிவியல் பல்கலையின் புதிய துணைவேந்தர் பதவிக்கு, தகுதியானவர்களின் பெயர்களை தேர்வு செய்ய ஆய்வுக் குழு அமைத்து, அம்மாநில கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த குழுவின் உறுப்பினராக, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜனை நியமித்து, அம்மாநில கவர்னர் உத்தரவிட்டுள்ளார். 12வது ஐந்தாண்டு திட்ட தயாரிப்பு குழுவிலும், மயில்வாகனன் நடராஜன் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, மத்திய திட்டக்குழு பிறப்பித்துள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.