/உள்ளூர் செய்திகள்/வேலூர்/அமைச்சர் தகவல் சுற்றுலா தகவல் மையம் அதிகம் அமைக்கப்படும்அமைச்சர் தகவல் சுற்றுலா தகவல் மையம் அதிகம் அமைக்கப்படும்
அமைச்சர் தகவல் சுற்றுலா தகவல் மையம் அதிகம் அமைக்கப்படும்
அமைச்சர் தகவல் சுற்றுலா தகவல் மையம் அதிகம் அமைக்கப்படும்
அமைச்சர் தகவல் சுற்றுலா தகவல் மையம் அதிகம் அமைக்கப்படும்
ADDED : ஜூலை 11, 2011 11:58 PM
வேலூர்: ''சுற்றுலா துறை மூலம் தகவல் மையங்கள் அதிகளவு அமைக்கப்படும்,'' என அமைச்சர் கோகுல இந்திரா கூறினார்.
வேலூர் மாவட்டம் ஏலகிரிமலையில் கோடைவிழா நிறைவு விழா நேற்று முன் தினம் மாலை நடந்தது. கலெக்டர் நாகராஜன் தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது: தமிழகத்தில், 37 ஆயிரம் கோவில்கள், ஏராளமான நினைவுச் சின்னங்கள், பூங்காக்கள், வனக்காப்பகங்கள், பறவை சரணாலயங்கள் உள்ளன. சுற்றுலா துறை மூலம் தகவல் மையங்கள் அதிகளவு அமைத்து ஃபோட்டோக்கள் மூலம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்கு, எத்தனை கிலோ மீட்டர் தூரம் உள்ளது என்ற விபரங்கள் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் ஜெயக்கொடி, எம்.எல்.ஏ., க்கள் வீரமணி, ரமேஷ், சம்பத் கமார், ரவி, கலையரசன், திட்ட இயக்குனர் அருள் ஜோதி அரசன், டி.ஆர்.ஓ., சுந்தர வள்ளி, திருப்பத்தூர் உதவி கலெக்டர் லலிதா லட்சுமி, வன அலுவலர் பத்மாவதி கலந்து கொண்டனர்.