/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலூர் மத்திய சிறையில் இருந்த மாஜி மந்திரிக்கு இடைக்கால ஜாமின்கடலூர் மத்திய சிறையில் இருந்த மாஜி மந்திரிக்கு இடைக்கால ஜாமின்
கடலூர் மத்திய சிறையில் இருந்த மாஜி மந்திரிக்கு இடைக்கால ஜாமின்
கடலூர் மத்திய சிறையில் இருந்த மாஜி மந்திரிக்கு இடைக்கால ஜாமின்
கடலூர் மத்திய சிறையில் இருந்த மாஜி மந்திரிக்கு இடைக்கால ஜாமின்
ADDED : செப் 01, 2011 11:48 PM
கடலூர் : நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் நேரு, தனது மகன் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க, இடைக்கால ஜாமினில் நேற்று மாலை புறப்பட்டுச் சென்றார்.
நில அபகரிப்பு வழக்கில், முன்னாள் அமைச்சர் நேரு உள்ளிட்டோர், கடந்த 25ம் தேதி கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், அவரது மகன் அருணுக்கு, கடலூர் மாவட்டம் வடலூரில் இன்று (2ம் தேதி) திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. இதில் பங்கேற்க, இடைக்கால ஜாமின் கோரி, திருச்சி செஷன்ஸ் கோர்ட்டில், கடந்த 30ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, ஒரு நாள் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அதன் பேரில், கடலூர் சிறையில் இருந்த, முன்னாள் அமைச்சர் நேரு, நேற்று மாலை 5.55 மணிக்கு, போலீஸ் காவலுடன் சிறையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.