/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சுப்பிரமணிய பாரதியார் பள்ளியில்உணவு முறை விழிப்புணர்வு முகாம்சுப்பிரமணிய பாரதியார் பள்ளியில்உணவு முறை விழிப்புணர்வு முகாம்
சுப்பிரமணிய பாரதியார் பள்ளியில்உணவு முறை விழிப்புணர்வு முகாம்
சுப்பிரமணிய பாரதியார் பள்ளியில்உணவு முறை விழிப்புணர்வு முகாம்
சுப்பிரமணிய பாரதியார் பள்ளியில்உணவு முறை விழிப்புணர்வு முகாம்
ADDED : செப் 15, 2011 10:52 PM
புதுச்சேரி:சுப்பிரமணிய பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்
என்.எஸ்.எஸ்., சார்பில் யோகாசனப் பயிற்சி மற்றும் உணவு முறை குறித்த
விழிப்புணர்வு முகாம் நடந்தது.தமிழாசிரியை பூங்குழலி பெருமாள் வரவேற்றார்.
பள்ளி துணை முதல்வர் ஷகிலா வாகீது தலைமை தாங்கினார். ஆசிரியர் தேவராணி
வாழ்த்திப் பேசினார். முகாமில் யோகாசனப் பயிற்சியாளர் சுந்தரம், அம்மு
ஆகியோர் மாணவர்களுக்கு யோகாசனப் பயிற்சி மற்றும் விட்டமின் சத்துக்கள்
அடங்கிய காய்கறிகள் உட்கொள்ள வேண்டிய அவசியம் குறித்து
விளக்கமளித்தனர்.முகாம் ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்
தீர்க்கசுபா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். ஆசிரியை பத்மசாவித்திரி
நன்றி கூறினார்.