Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பி.டி.ஓ.,- கவுன்சிலர்கள் வாக்குவாதம் தி.கோடு யூனியன் கூட்டத்தில் பரபரப்பு

பி.டி.ஓ.,- கவுன்சிலர்கள் வாக்குவாதம் தி.கோடு யூனியன் கூட்டத்தில் பரபரப்பு

பி.டி.ஓ.,- கவுன்சிலர்கள் வாக்குவாதம் தி.கோடு யூனியன் கூட்டத்தில் பரபரப்பு

பி.டி.ஓ.,- கவுன்சிலர்கள் வாக்குவாதம் தி.கோடு யூனியன் கூட்டத்தில் பரபரப்பு

ADDED : ஜூலை 27, 2011 01:27 AM


Google News

திருச்செங்கோடு: திருச்செங்கோடு யூனியன் கவுன்சில் கூட்டத்தில், நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற பி.டி.ஓ., மறுத்ததால், கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செங்கோடு யூனியன் கவுன்சில் கூட்டம், அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. சேர்மன் தமிழரசு தலைமை வகித்தார். துணைத்தலைவர் முத்துமணி, பி.டி.ஓ., சிட்டிபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: கவுன்சிலர் மாணிக்கம்(தி.மு.க.,): தற்போது நடக்கும் கூட்டத்துக்காக அஜந்தாவில், 19 தீர்மானங்கள் உள்ளது. 20வது தீர்மானமாக பொது நிதியில் இருந்து அனைத்து கவுன்சிலர்களின் பகுதிகளுக்கும், 2011-2012 நிதியாண்டில் தலா மூன்று லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்ய தீர்மானம் பதிவு செய்ய வேண்டும். சிட்டிபாபு (பி.டி.ஓ.,): யூனியனில் நிதி இல்லாதபோது தீர்மானம் நிறைவேற்றக் கூடாது. கவுன்சிலர் மாணிக்கம்(தி.மு.க.,): தீர்மானம் நிறைவேற்றலாம், நிறைவேற்றக்கூடாது என, மன்றத்தின் உரிமையில் பி.டி.ஓ., தலையிடக்கூடாது. அரசிடம் இருந்து நிதி ஆதாரம் வருவதில், சட்டசபை தேர்தல் காரணமாக காலதாமதம் ஏற்பட்டுள்ளதை கவுன்சிலர்கள் அனைவரும் அறிவர். இருப்பினும், மக்களுக்கு பயன்படும் தீர்மானங்கள் நிறைவேற்றுவதில் என்ன தவறு. அரசிடம் இருந்து நிதி வந்ததும் திட்ட செலவுகளை செய்ய பி.டி.ஓ., அனுமதிக்கலாம்.

பி.டி.ஓ.,: உயர் அதிகாரிகளின் உத்தரவை பெறாமல் தீர்மானத்துக்கு அனுமதி அளிக்க முடியாது. கவுன்சிலர் மாணிக்கம்: தீர்மானம் நிறைவேற்ற பி.டி.ஓ., அனுமதி தேவையில்லை. மக்களின் தேவைகளை தீர்மானமாக கொண்டு வந்து மன்றத்தில் பதிவு செய்து தீர்மானம் நிறைவேற்றுவது கவுன்சிலர்களின் உரிமையும், கடமையுமாகும். தீர்மானம் நிறைவேற்றுவதில் பி.டி.ஓ.,வுக்கு கருத்து வேறுபாடு இருந்தால், கூட்டத்தை ஒத்தி வைத்து விட்டு உயர் அதிகாரிகளிடம் உரிய விளக்கம் பெற்று பின் கூட்டத்தை நடத்தலாம். துணைத்தலைவர் முத்துமணி (ம.தி.மு.க.,) கவுன்சிலர் மாணிக்த்தின் கோரிக்கையை ஏற்று தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். அரசிடம் இருந்து நிதி வந்தவுடன் பணிகள் செய்யலாம். அனைத்து கவுன்சிலர்களும் இதே கருத்தை வலியுறுத்தியதால், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழரசு (சேர்மன்): அரசு நிதி ஒதுக்கீடு கிடைத்த பின் ஒவ்வொரு பகுதிக்கும், இரண்டு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us