ADDED : ஜூலை 19, 2011 12:20 AM
திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூரில் சைவ சித்தாந்த சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்தது.
திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டார் கோவில் அறவுரை மண்டபத்தில் சைவசித்தாந்த சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடந்தன. அம்பலவாணத் தம்பிரான் சுவாமிகள் தலைமை தாங்கினார். பேராசிரியர் தங்கதுரை சிவஞானபோதத்தின் 8ம் சூத்திரம் குறித்து பயிற்சி அளித்தார். இதில் விருத்தாச்சலம் மையத்தை சேர்ந்தவர்கள் பயிற்சி பெற்றனர். பயிற்சி மைய அமைப்பாளர் பால்ராஜ், தேவாரபாடசாலை தலைவர் ரத்தினசபாநாதன் கலந்து கொண்டனர்.