இளங்கலை உடனடி சிறப்பு தேர்வு அறிவிப்பு
இளங்கலை உடனடி சிறப்பு தேர்வு அறிவிப்பு
இளங்கலை உடனடி சிறப்பு தேர்வு அறிவிப்பு
ADDED : ஜூலை 23, 2011 12:08 AM
மதுரை : மதுரை காமராஜ் பல்கலையின் சி.பி.சி.எஸ்., இளநிலை (செமஸ்டர்) பட்டப்படிப்பு (பி.ஏ., பி.எஸ்சி., பி.பி.ஏ., பி.காம்.,) சிறப்பு உடனடி தேர்வு ஜூலை 27ம் தேதி துவங்க உள்ளது.
ஆக., 5ம் தேதி வரை தேர்வு நடைபெறும்.
ஆறாவது பருவத் தேர்வில் தோல்வி அடைந்து, தேர்ச்சி பெற தேவைப்படும் பாடங்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த அறிவிப்பால் 550 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு நுழைவுச் சீட்டு அனுப்பப்பட்டுள்ளது. ஜூலை 25ம் தேதிக்குள் நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள், 26ம் தேதி தேர்வாணையர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு நுழைவுச் சீட்டைப் பெறலாம். பல்கலையின் மு.வ., அரங்கில் மட்டுமே இத்தேர்வு நடைபெறும். மாணவர்கள் தேர்வு துவங்கும் ஒரு மணி நேரத்திற்கு முன், நுழைவுச் சீட்டுடன் மையத்தில் இருக்க வேண்டும், என தேர்வாணையர் ராஜியக்கொடி தெரிவித்துள்ளார்.