Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லையில் ஐஜேகே கட்சியினர் 50 பேர் ரத்ததானம்

நெல்லையில் ஐஜேகே கட்சியினர் 50 பேர் ரத்ததானம்

நெல்லையில் ஐஜேகே கட்சியினர் 50 பேர் ரத்ததானம்

நெல்லையில் ஐஜேகே கட்சியினர் 50 பேர் ரத்ததானம்

ADDED : ஆக 15, 2011 01:34 AM


Google News

திருநெல்வேலி : ஐஜேக., நிறுவனத் தலைவர் பாரிவேந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை தலைமை அலுவலகத்தில் 50பேர் ரத்த தானம் செய்தனர்.இந்திய ஜனநாயக கட்சியின்(ஐஜேகே) நிறுவன தலைவர் பாரிவேந்தர் பிறந்தநாளான வரும் 24ம்தேதியை இளைஞர் எழுச்சி நாளாக தமிழக முழுவதும் கட்சியினர் கொண்டாடவுள்ளனர்.ஐஜேகே நிறுவன தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாவட்டம் சார்பில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியினர் ரத்த தானம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு தென் மண்டல அமைப்பு செயலாளர் பாலகுருநாதன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ரவி யாதவ், மாவட்ட மகளிர் அணி டாக்டர் சகிலா முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரமேஷ் பாண்டியன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அகில இந்திய பொது செயலாளர் மதன் கலந்து கொண்டார். இதில் ஐஜேகே கட்சியை சேர்ந்த 50 பேர் ரத்த தானம் வழங்கினர்.நிகழ்ச்சியில் பல்லமடை கண்ணன், மானூர் யூனியன் செயலாளர் கரு.மாரியப்பன், ஜான்துரை, சாம்பு கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்திருந்தனர்.ஐஜேகே நிறுவனர் பிறந்த நாளான வரும் 24ம்தேதி கண் தான முகாமும், நெல்லையப்பர் கோயிலில் சிறப்பு வழிபாடும், சர்ச் மற்றும் பள்ளிவாசலில் சிறப்பு பிரார்த்தனையும் நடக்கிறது.இதனையடுத்து கண் பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளி மாணவர்களுக்கும், ஆதரவற்ற முதியவர்களுக்கும் அன்னதானம் வழங்க கட்சியினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். ஐஜேகே.,வர்த்தக அணி மாவட்ட செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us