2ஜி ஸ்பெக்ட்ரம் என்ற தலைப்பில் சினிமா போஸ்டர்
2ஜி ஸ்பெக்ட்ரம் என்ற தலைப்பில் சினிமா போஸ்டர்
2ஜி ஸ்பெக்ட்ரம் என்ற தலைப்பில் சினிமா போஸ்டர்
ADDED : ஜூலை 15, 2011 12:52 AM
ஈரோடு: '2ஜி' ஸ்பெக்ட்ரம் என்ற தலைப்பில், சினிமா படம் போஸ்டர், ஈரோட்டில் நேற்று ஒட்டப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு பிரப் சாலையின் ஓரத்தில் உள்ள காம்பவுன்ட் சுவற்றில் இந்த போஸ்டர் நேற்று ஒட்டப்பட்டிருந்தது.
இப்படத்தில் நடிகராக ரியாஷ்கானுடன் இரு கதாநாயகிகள் இருப்பது போன்று போஸ்டர் அச்சிடப்பட்டுள்ளது. ஈரோடு ரவிச்சந்திரன் என்பவர், இப்படத்தை தயாரித்துள்ளதாக ஒட்டப்பட்டுள்ளது.மேலும், அந்த போஸ்டரில், 'மாபெரும் மறுமலர்ச்சி மாற்றம் தந்த, தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு '2ஜி' ஸ்பெக்ட்ரம் படக்குழுவினரின் நன்றி' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. ஈரோடு பிரப் சாலை, எப்போதும் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இடம் என்பதால், வருவோர் போவோர் அனைவரும் இந்த போஸ்டரை பார்த்தபடி சென்றனர். அரசியல் என்கிற பெயரில், ஊழல் புரிவோரின் படங்கள் கூட வெளியாகிறதே என, பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.