Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/"வாட்' வரி விதிப்பு "சிம்கா' வரவேற்பு

"வாட்' வரி விதிப்பு "சிம்கா' வரவேற்பு

"வாட்' வரி விதிப்பு "சிம்கா' வரவேற்பு

"வாட்' வரி விதிப்பு "சிம்கா' வரவேற்பு

ADDED : ஜூலை 14, 2011 09:42 PM


Google News
திருப்பூர் : நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பனியன் துணிகளுக்கு ஐந்து சதவீத மதிப்பு கூட்டு வரி விதித்துள்ளதை, 'சிம்கா' சங்கம் வரவேற்றுள்ளது.'சிம்கா' சங்க தலைவர் விவேகானந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை:பெரிய நூற்பாலைகள், உற்பத்தி செய்யப்படும் நூல்களை கொண்டு, அவர்களே 'நிட்டிங்' செய்து துணிகளாக விற்பனை செய்ததால், வரி விலக்கு பெற்று வந்தன. துணியாக விற்பனை செய்து வந்த நூற்பாலைகள் மட்டுமே பயனடைந்தன.

இதன் மூலம் திருப்பூரில் உள்ள 'ஜாப் ஒர்க்' முறையில் செயல்படும் 'நிட்டிங்' நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.திருப்பூரில், 'ஜாப் ஒர்க்' முறையில் 800க்கும் அதிகமான நிறுவனங்கள், 7,000 'நிட்டிங்' மெஷின்களுடன் இயங்கி வருகின்றன. பின்னலாடை துணி உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு தற்போது ஐந்து சதவீத 'வாட்' வரியை விதித்துள்ளது. 'ஜாப் ஒர்க்' முறையில் இயங்கும் 'நிட்டிங்' நிறுவனங்கள் கடும் பாதிப்பில் இருந்து விடுபடும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், தமிழக அரசின் முடிவை, 'சிம்கா' சங்கம் வரவேற்கிறது, என்று தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us