/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/உப்புநீர் வினியோகம் செய்யும் "டேங்க் ஆப்ரேட்டர்' :எறையம்பட்டி கிராம மக்கள் அவதிஉப்புநீர் வினியோகம் செய்யும் "டேங்க் ஆப்ரேட்டர்' :எறையம்பட்டி கிராம மக்கள் அவதி
உப்புநீர் வினியோகம் செய்யும் "டேங்க் ஆப்ரேட்டர்' :எறையம்பட்டி கிராம மக்கள் அவதி
உப்புநீர் வினியோகம் செய்யும் "டேங்க் ஆப்ரேட்டர்' :எறையம்பட்டி கிராம மக்கள் அவதி
உப்புநீர் வினியோகம் செய்யும் "டேங்க் ஆப்ரேட்டர்' :எறையம்பட்டி கிராம மக்கள் அவதி
ADDED : ஜூலை 23, 2011 01:01 AM
நாமக்கல்: தனியார் தண்ணீர் சப்ளை செய்பவர்களிடம் கணிசமான தொகை பெற்றுக்கொள்ளும் பஞ்சாயத்து டேங்க் ஆப்ரேட்டர், குடிநீர் டேங்கில் உப்பு நீரை ஏற்றி மக்களுக்கு வினியோகம் செய்வதால், எறையம்பட்டி கிராம மக்கள், காசு கொடுத்து குடிநீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நாமக்கல் அடுத்த எலச்சிபாளையம் யூனியன், பொம்மம்பட்டி பஞ்சாயத்தில், எறையம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு, 150க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த, 800க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு, பஞ்சாயத்து சார்பில் குடிநீர் வழங்குவதற்காக ஆறு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதில், ஆற்று நீர் மற்றும் ஆழ்துளை குழாய் நீரும் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் ஏற்றி தினமும் மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. ஆற்று நீர் குறிப்பிட்ட நேரத்துக்கு மக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவிடப்படுகிறது. மேல்நிலை தொட்டியில் பாதியளவு ஆற்றுநீர் குறைந்ததும், மறு நாள் உப்பு நீரை அத்தொட்டியில் ஏற்றுகின்றனர். அதை காலையில் திறந்துவிடும் போது இரண்டும் கலந்த நீரை சப்ளை செய்யும் நிலை ஏற்படுகிறது. அந்த நீரை மக்கள் குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. ஆற்றுநீர் முழுவதும் தீர்ந்த பின் உப்பு நீரை தொட்டியில் ஏற்றினால் மக்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும். தண்ணீர் திறந்துவிடும் டேங்க் ஆப்ரேட்டர், பணத்துக்கு ஆசைப்பட்டு இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. உப்பு நீரை டேங்கில் ஏற்றி அதை மக்களுக்கு திறந்துவிடும்போது, குடிப்பதற்கு அப்பகுதியில் விற்பனை செய்யும் கொல்லிமலை குடிநீரை மக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகும். அவ்வாறு செய்வதன் மூலம் சம்பந்தப்பட்ட தனியார் தண்ணீர் சப்ளை செய்பவர்கள் கணிசமான தொகையை டேங்க் ஆப்ரேட்டருக்கு வழங்குகின்றனர். அதன் காரணமாகவே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஆற்றுநீர் இருக்கும் போதே உப்பு நீரையும் ஏற்றி, இரண்டும் கலந்த நீரை வினியோகம் செய்து வருகிறார். இது குறித்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர். மக்களின் நலனை கருத்தில் கொண்டு குடிநீரை முறையாக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.