Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ஏரியில் ஆகாய தாமரை அகற்றம் :ரூ.ஒரு கோடியில் பொழுதுபோக்கு வளர்ச்சி திட்டம்

ஏரியில் ஆகாய தாமரை அகற்றம் :ரூ.ஒரு கோடியில் பொழுதுபோக்கு வளர்ச்சி திட்டம்

ஏரியில் ஆகாய தாமரை அகற்றம் :ரூ.ஒரு கோடியில் பொழுதுபோக்கு வளர்ச்சி திட்டம்

ஏரியில் ஆகாய தாமரை அகற்றம் :ரூ.ஒரு கோடியில் பொழுதுபோக்கு வளர்ச்சி திட்டம்

ADDED : ஜூலை 13, 2011 11:56 PM


Google News
ஓசூர் : ஓசூர் சந்திராம்பிகை ஏரியில் ஆகாயதாமரை செடிகளை அகற்றி கேரளாவில் உள்ளதை போல் பொதுமக்கள், குழந்தைகளை கவரும் வகையில் மிதக்கும் படகுவீடு, சுற்றுலா ஹோட்டல் உள்ளிட்டவைகள் ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்க தன்னார்வ அமைப்புகள் மூலம் மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஓசூர் பெங்களூரு நான்கு வழிச்சாலையோட்டி தர்கா பகுதியில் பழமை வாய்ந்த சந்திராம்பிகை ஏரி 110 ஏக்கரில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த ஏரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. கடந்த காலத்தில் ஏரியில் மீன்வளத்துறை மூலம் மீன்கள் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அதன்பின் ஏரியில் ஆகாய தாமரைச்செடி அதிகரித்தால் மீன்களை பிடிக்க முடியாமல் மீன்வளத்துறை ஏரியில் மீன்வளத்தை பெருக்கும் நடவடிக்கையை கை விட்டது. அதன்பின் ஏரி நீர் பயன்பாடும் இல்லாமல் வீணாகி வந்தது. சுற்றுவட்டார குடியிருப்புகள், தொழிற்சாலைகள், ஹோட்டல்களில் இருந்து வீணாகும் கழிவுநீர், உணவு கழிவுகள் இந்த ஏரியில் வந்து கொட்டப்படுவதால் ஏரி நீர் மாசு அடைந்து கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. ஏரி நீர் வெளியே தெரியாதபடி ஆகாய தாமரை செடிகள் ஆக்கிரமிப்பு அதிகமானதால், ஏரியின் நீர் ஆதாரம் கேள்வி குறியானது. ஏரியை சுற்றிலும் உள்ள தனியார் ஏரி நிலத்தை ஆக்கிரமித்து வந்ததால் ஏரி அழியும் அபாயம் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், ஏரியை பராமரித்து பாதுகாக்கவும், நீர் ஆதாரத்தை பெருக்கவும் வலியுறுத்தினர். ஓசூர் டைட்டான் நிறுவனம், ரோட்டரி கிளப், தனியார் நிறுவனங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து ஏரியை பராமரித்து சிறந்த சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் சப்-கலெக்டர் பிரசாந்த் முகுந்த் வடநேரே தலைமையில் நகராட்சி அதிகாரிகள், பஞ்சாயத்து யூனியன் அதிகாரிகள், சமூக ஆவர்வலர்கள் மற்றும் தனியார் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அழிவின் விளிம்பில் உள்ள ஏரியை பராமரித்து பொதுமக்கள், குழந்தைகளை கவரும் வகையில் ஒரு கோடி ரூபாய் வரை பல்வேறு பொழுது போக்கு அம்சம்ங்கள் அமைத்து சிறந்த சுற்றுலா தலமாக்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக டைட்டான் நிறுவனம் சார்பில் 15 லட்சம் ரூபாய் செலவில் தற்போது ஏரியில் ஜே.சி.பி., எந்திரம் மூலம் ஆகாய தாமரைச்செடிகள், கழிவுகளை அகற்றி 2 அடி ஆழப்படுத்தும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். வருவாய்துறை மூலம் ஏரியை சுற்றிலும் தனியார் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ஏரியின் நடுவில் தன்னார்வ அமைப்புகள் உதவியுடன் மாவட்ட நிர்வாகம் கேரளா மாநிலம் ஆலப்புழை, தேக்கடி ஆகிய இடங்களில் உள்ள தண்ணீரில் மிதக்கும் ஹோட்டல், படகு போக்குவரத்து ஆகியவற்றை அமைக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. ஏரியை சுற்றிலும் பொதுமக்கள் வாக்கில் செல்வதற்கு நடைபாதை, இரவை பகலாக்கும் அலங்கார மின்விளக்குகள், அலங்கார பூஞ்செடிகள், மரங்கள் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து டைட்டான் நிறுவன பிரதிநிதி ரகுவந்தம்மன் கூறுகையில், ''ராமநாயக்கன் ஏரியை போல் சந்திராம்பிகை ஏரியும் வறண்டு அழிந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் ஏரியை தூய்மைப்படுத்தி சுற்றுலா தலமாக்க மாவட்ட நிர்வாம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ஒருபகுதியாக தன்னார்வ அமைப்புகள் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us