Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக துணிப்பை : புழல் சிறையில் திட்டம்

பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக துணிப்பை : புழல் சிறையில் திட்டம்

பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக துணிப்பை : புழல் சிறையில் திட்டம்

பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக துணிப்பை : புழல் சிறையில் திட்டம்

ADDED : ஜூலை 13, 2011 12:01 AM


Google News
Latest Tamil News
சென்னை : புழல் மத்திய சிறையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க துணிப்பைகளை பயன்படுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது. சுற்றுச்சூழலுக்கு வில்லனாக மாறிவரும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தமிழக அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, சென்னை புழல் மத்திய சிறையில், பிளாஸ்டிக் தடைசெய்யப்பட்டுள்ளது. புழல் சிறையில், ஒரு நாளைக்கு 200 முதல் 300 கைதிகளை, அவர்களின் உறவினர்கள் சந்திக்க வருவது வழக்கம். அவர்கள் கொண்டு வரும் பழம், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப்பொருட்கள், சோப்பு, பல்பொடி, எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் பிளாஸ்டிக் பைகளில்தான் எடுத்து வரப்படுகின்றன.

கைதிகளை சந்திக்க வரும் பார்வையாளர்கள் கொண்டு வரும் பொருட்கள், சிறை வாயில் அருகே உள்ள சோதனை அறையில் பரிசோதிக்கப்படும். பின் சிறைத்துறை சார்பில், வரிசை எண் அச்சிடப்பட்ட டோக்கன் இணைக்கப்பட்ட, பச்சை நிற துணிப்பையில் பார்வையாளர்கள் கொண்டுவரும் பொருள்கள் வைக்கப்படும்.

அதே எண் கொண்ட, மற்றொரு டோக்கன் பார்வையாளர்கள் மூலம், சிறைவாசிகளிடம் அளிக்கப்படும். பின்னர் அவர்கள் தங்களிடம் உள்ள டோக்கனை, ஜெயிலர் அறையில் கொடுத்து விட்டு, தங்களுக்குரிய பையில் இருந்து பொருட்களை எடுத்துக் கொள்ளலாம். பார்வையாளர் சோத னை அறையில் இருந்து, ஒரு முறைக்கு 30 பைகள் வீதம் சிறைக்குள் கொண்டு செல்லப்படும். அதற்காக, விசாரணை மற்றும் தண்டனை சிறைகளுக்காக தலா 200 பைகளும், மகளிர் சிறைக்கு 100 பையும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி சிறைத்துறை அதிகாரி கூறுகையில், ''தீவிர பிளாஸ்டிக் ஒழிப்பின் மூலம், சிறை வளாகத்தின் சுற்றுச்சூழலை பாதுகாத்து மழை நீரை சேமிக்கவும், குறிப்பாக பார்வையாளர்கள் மூலம் தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறைக்குள் செல்வதை தடுக்கவும் முடிகிறது. உறவினர்கள் மூலம், தங்களுக்கு அளிக்கப்பட்ட உணவுப்பொருட்கள் முழுமையாக கிடைப்பதில் சிறைவாசிகளும் மகிழ்கின்றனர். தமிழகத்தின் அனைத்து சிறைகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் புழல் மத்திய சிறை தமிழகத்தின், 'முன் மாதிரி' சிறையாக உள்ளது'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us