தமிழ் இனக்கொலை என்ற சி.டி.,யைமாணவர்களுக்கு வைகோ வழங்கினார்
தமிழ் இனக்கொலை என்ற சி.டி.,யைமாணவர்களுக்கு வைகோ வழங்கினார்
தமிழ் இனக்கொலை என்ற சி.டி.,யைமாணவர்களுக்கு வைகோ வழங்கினார்
ADDED : ஜூலை 13, 2011 12:23 AM

சென்னை:'சிங்கள அரசின் தமிழ் இனக்கொலை, ஐ.நா.,வின் மூவர் குழு அறிக்கை' என்ற சி.டி.,யை, சென்னை கிறித்துவ கல்லூரி மாணவர்களுக்கு வைகோ நேற்று வழங்கினார்.'சிங்கள அரசின் தமிழ் இனக்கொலை, ஐ.நா.,வின் மூவர் குழு அறிக்கை' என்ற சி.டி.,யை, கிழக்கு தாம்பரத்தில் உள்ள சென்னை கிறித்துவ கல்லூரி மாணவர்களுக்கு, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ நேற்று வழங்கினார்.
அப்போது, அவர் கூறியதாவது:இலங்கையில் தமிழர்களை துடிக்க, துடிக்க சிங்கள அரசும், அதன் ராணுவமும் படுகொலை செய்த காட்சிகளை சி.டி.,யாக தொகுத்து, தமிழக மக்கள் மத்தியில் எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளோம். குறிப்பாக, மாணவர்கள் இதயத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காக, இதில் ஈடுபட்டுள்ளோம்.இந்த சி.டி.,யை பார்த்து தூங்க முடியாது, சாப்பிட முடியாது, கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது.
இந்த தமிழ் இனக்கொலையை பற்றி மாணவர்கள் தெரிந்து கொண்டு, பொங்கி எழுந்தால், அதை, எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.ஒவ்வொரு மாணவரும் இந்த சி.டி.,யில் இருந்து, சில பிரதிகளை எடுத்து மற்றவர்களுக்கு கொடுங்கள். கட்சிக்காக இதை நாங்கள் செய்யவில்லை. இங்கு மட்டும், 3,500 சி.டி.,க்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதேபோல், தமிழகம் முழுவதும் இப்பணி நடந்து வருகிறது. இந்த படுகொலையை செய்தவன் தப்பவே முடியாது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அவன் தண்டிக்கப்படுவான்.இவ்வாறு, வைகோ கூறினார்.