ரயில் தண்டவாளத்தில் பச்சிளம் குழந்தை
ரயில் தண்டவாளத்தில் பச்சிளம் குழந்தை
ரயில் தண்டவாளத்தில் பச்சிளம் குழந்தை
ADDED : ஜூலை 12, 2011 09:30 AM
பாலக்காடு: ரயில் தண்டவாளத்தில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு ரயில் நிலையத்தில், நிலம்பூர் பாசஞ்சர் ரயில் புறப்பட்ட சென்ற சில நிமிடங்களில் தண்டவாளத்தில் பச்சிளம் குழந்தை இருப்பதை கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்நிலையில், அந்த தண்டவாளத்தில் திருவனந்தபுரத்திலிருந்து பாலக்காடு நோக்கி அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் வருவதாக இருந்தது. இதையடுத்து விரைந்து செயல்பட்ட போலீசார் குழந்தையை காப்பாற்றினர். போலீசார் விசாரணையில், 40 வயது பெண் கூலித்தொழிலாளி ஒருவர், ரயில் கழிவறையில் குழந்தையை பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


