Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/இறுதி ஊர்வலத்துக்கு பாதை மறுப்பு இறந்தவர் உடலுடன் சாலைமறியல்

இறுதி ஊர்வலத்துக்கு பாதை மறுப்பு இறந்தவர் உடலுடன் சாலைமறியல்

இறுதி ஊர்வலத்துக்கு பாதை மறுப்பு இறந்தவர் உடலுடன் சாலைமறியல்

இறுதி ஊர்வலத்துக்கு பாதை மறுப்பு இறந்தவர் உடலுடன் சாலைமறியல்

ADDED : ஜூலை 12, 2011 12:07 AM


Google News
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே இறந்த முதியவரின் உடலை அடக்கம் செய்வதற்கான இறுதி யாத்திரையின் போது பாதை மறுக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் உடலை ரோட்டில் வைத்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த எரிச்சியைச் சேர்ந்தவர் ரெங்கசாமி(72). உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் இரவு இவர் இறந்தார். இதையடுத்து இறுதிசடங்குக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. நேற்று மாலை ஐந்து மணிக்கு ரெங்கசாமியின் உடல் அருகில் உள்ள சுடுகாட்டுக்கு எடுத்துசெல்ல முயன்றனர். சுடுகாடு செல்ல ஒதுக்குப்புறமான வேறு ஒரு பாதை உள்ள நிலையில் குடியிருப்புகள் நிறைந்த பகுதி வழியாக செல்ல அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரெங்கசாமியின் உறவினர்கள் அவரது உடலை ரோட்டில் வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக புதுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் நேற்றுமாலை அரைமணி நேரம்வரை போக்குவரத்து தடைபட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினர் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us