பயோ மெட்ரிக் ரேஷன் கார்டு மூன்று மாவட்டங்கள் தேர்வு
பயோ மெட்ரிக் ரேஷன் கார்டு மூன்று மாவட்டங்கள் தேர்வு
பயோ மெட்ரிக் ரேஷன் கார்டு மூன்று மாவட்டங்கள் தேர்வு
ADDED : செப் 14, 2011 01:25 AM
தேனி :பயோ மெட்ரிக் ரேஷன் கார்டுகள் வழங்குவதற்கான பணிகளை, சோதனை அடிப்படையில் மூன்று மாவட்டங்களில் செயல்படுத்த, அரசு திட்டமிட்டுள்ளது.
ரேஷன் கார்டுகளில் நடக்கும் தில்லு முல்லுகள், கடத்தல்களைத் தடுக்கவும், போலி கார்டுகளை கண்டறியவும், பயோ மெட்ரிக் முறையில், ரேஷன் கார்டுகள் வழங்கப்பட உள்ளன.கண் விழி, கைவிரல் ரேகையைப் பயன்படுத்தி, குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பொருட்களைப் பெறும் வகையில், இந்த கார்டுகள் தயாரிக்கப்படுகின்றன. முதற்கட்டமாக, திருச்சி, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், சோதனை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.2013ல் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.


