/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பாயின்ட்கள் இணைக்கும் பணி 18ம் தேதி ரயில்கள் தாமதமாகும்பாயின்ட்கள் இணைக்கும் பணி 18ம் தேதி ரயில்கள் தாமதமாகும்
பாயின்ட்கள் இணைக்கும் பணி 18ம் தேதி ரயில்கள் தாமதமாகும்
பாயின்ட்கள் இணைக்கும் பணி 18ம் தேதி ரயில்கள் தாமதமாகும்
பாயின்ட்கள் இணைக்கும் பணி 18ம் தேதி ரயில்கள் தாமதமாகும்
ADDED : செப் 13, 2011 12:46 AM
விழுப்புரம் : விக்கிரவாண்டி ரயில் நிலையத்தில், தண்டவாள 'ஷண்டிங் பாயின்ட்கள்' இணைக்கும் பணி, வரும் 17, 18ம் தேதிகளில் நடக்கிறது.
இதனால், சென்னை- விழுப்புரம் மார்க்கத்தில், ரயில்கள் வரும் 18ம் தேதி 2 மணி நேரம் தாமதமாக வாய்ப்புகள் உள்ளன. செங்கல்பட்டு - விழுப்புரம் இடையே, 105 கி.மீ., தூரத்திற்கு இரண்டாம் அகல ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. விக்கிரவாண்டி ரயில் நிலையத்தில், தண்டவாளம் அமைக்கும் பணிகள் முடிந்து, அங்குள்ள தண்டவாளங்களை ஒன்றாக இணைக்க, 12 'ஷண்டிங் பாயின்ட்கள்' பொருத்தும் பணி, வரும் 17ம் தேதியும், 18ம் தேதியும் நடக்கிறது. இப்பணி நடப்பதால், ஏற்கனவே இருக்கும் எலக்ட்ரானிக் சிக்னல் இணைப்புகளைத் துண்டித்து, (நான் இன்டர் லாக்கிங் சிஸ்டம்) சிக்னல் இல்லாமல் கடப்பாரை உதவியோடு, ஊழியர்கள் தண்டவாளங்களை இணைத்து, ரயில்களை நிலையத்திற்குள் இருக்கும் பிளாட்பாரங்களுக்கு அனுப்புவர். அதன் பிறகு, டி-28 இயந்திரத்தின் உதவியோடு, 12 தண்டவாளங்களின் 'ஷண்டிங் பாயின்ட்களும்' ஒரே கட்டுப்பாட்டில் (இன்டர் லாக்கிங் சிஸ்டம்) கொண்டு வரப்படும்.இதனால், சென்னை - விழுப்புரம் மார்க்கத்தில், பகல் நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும், வரும் 18ம் தேதி 2 மணி நேரத்திற்கு தாமதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.