/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தி.மு.க., இளைஞர் அணி சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிதி.மு.க., இளைஞர் அணி சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
தி.மு.க., இளைஞர் அணி சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
தி.மு.க., இளைஞர் அணி சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
தி.மு.க., இளைஞர் அணி சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
ADDED : ஆக 29, 2011 10:55 PM
புதுச்சேரி : புதுச்சேரி மாநில தி.மு.க., இளைஞர் அணி சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ரோஸ்மா திருமண நிலையத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் மாநில தி.மு.க., இளைஞர் அணி அமைப்பாளர் சிவா கலந்து கொண்டு இஸ்லாமிய மக்களுக்கு விருந்தளித்தார். வக்ப்போர்டு செயலாளர் ஷர்புதீன், டவுன் காஜியார் சையது மௌனா, முஸ்லீம் லீக் தலைவர் அப்துல்காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில தி.மு.க., அமைப்பாளர் ஜானகிராமன், முன்னாள் எம்.பி., திருநாவுக்கரசு, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் எஸ்.பி. சிவக்குமார், ராஜாராமன், மற்றும் கென்னடி உள்ளிட்ட பல்வேறு பிரிவு தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முகமது யூனுஸ், பெரோஸ் நாசர், ரபீக், அப்துல் ரகுமான், பஷீர், சாதிக், ஹாஜா, நசீர் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.