ADDED : ஆக 11, 2011 11:07 PM
திருப்பூர் : தாய்பாலின் மகத்துவத்தை விளக்கும் வகையில், ஆண்டுதோறும் ஆக., மாதம் தாய்பால் வாரவிழா கொண்டாடப்படுகிறது.
நல்லூர் அங்கன்வாடி மையத்தில் நேற்று நடந்த விழாவுக்கு, நகராட்சி செயல் அலுவலர் குற்றாலிங்கம் தலைமை வகித்தார். நல்லூர் சுற்றுப் பகுதிகளை சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர்.அங்கன்வாடி மைய ஆய்வாளர் வாசுகி, சத்துணவு ஆசிரியர் ப்ளோரா ஆகியோர் தாய்பாலின் மகத்துவம், குழந்தை வளர்ச்சி, ஆரோக்கியத்தில் தாய்பாலின் பங்களிப்பு குறித்து விளக்கினர். தாய்பால் நன்கு சுரப்பதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகள், தானியங்களை கர்ப்பிணிகள் பார்வையிட்டனர்; அவற்றின் நன்மைகள் குறித்து தெரிந்துகொண்டனர்.