/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகத்தில் சிறுதொழில் துவங்க கடன் விண்ணப்பம்சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகத்தில் சிறுதொழில் துவங்க கடன் விண்ணப்பம்
சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகத்தில் சிறுதொழில் துவங்க கடன் விண்ணப்பம்
சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகத்தில் சிறுதொழில் துவங்க கடன் விண்ணப்பம்
சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகத்தில் சிறுதொழில் துவங்க கடன் விண்ணப்பம்
ADDED : ஆக 03, 2011 10:25 PM
புதுச்சேரி : புதுச்சேரி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கழகம் சார்பில் சிறுத்தொழில்கள் துவங்க விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மேலாண் இயக்குனர் மோகன்தாஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: புதுச்சேரி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம், தேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு மற்றும் நிதி அபிவிருத்திக் கழகத்தின் நிதி உதவியுடன் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் சிறுபான்மையின மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்திட சிறு தொழில்கள்( பேக்கரி, பொது வணிகம், விரைவு உணவகம், இனிப்பகம், பால்பண்ணை, ஆயத்த ஆடையகம், அகர்பத்தி, மின்பொருள் கடை, அழகு நிலையம், செங்கல் சூளை, அறவை நிலையம், முடி திருத்தும் கடை, இரு சக்கர வாகன பழுது பார்க்கும் கடை மற்றும் கைவினை பொருள்கள்) போன்ற சிறு தொழில்கள் துவங்க காலக் கடன் குறைந்த வட்டி விகிதத்தில்(6 சதவீதம்) வழங்கப்படுகிறது.
இது தவிர புதுச்சேரி அரசு நடத்தும் ஒருங்கிணைப்புக்குழு மூலம் தேர்வு பெற்ற மாணவர்கள் தொழில் சார்ந்த கல்வி (பொறியியல், மருத்துவம், வேளாண்மை, பல் மருத்துவம், கால்நடை மருத்துவம்) பயில கல்விக்கடன் (வட்டி 4 சதவீதம்) தேசிய கழகத்தின் விதிமுறைகளின்படி வழங்கப்படுகிறது.
தகுதியுள்ள மக்கள், விண்ணப்பங்களை தலைமை அலுவலகம், புதுச்சேரி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கழகம், எண்.5, ஜமீன்தார் கார்டன் என்ற முகவரியில் பெற்று கொள்ளலாம். காரைக்கால் பகுதியை சேர்ந்தவர்கள் கிளை அலுவலகம், எண் 63/2, காமராஜர் சாலை,(பொது மருத்துவமனை எதிரில) காரைக்கால் என்ற முகவரியில் பெற்று கொள்ளலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.