புத்தக வங்கி வழங்கிய இலவச பாடப்புத்தகங்கள்
புத்தக வங்கி வழங்கிய இலவச பாடப்புத்தகங்கள்
புத்தக வங்கி வழங்கிய இலவச பாடப்புத்தகங்கள்
ADDED : ஜூலை 14, 2011 05:50 PM

சென்னை: சென்னையில் ஜெய்கோபால் கரோடியா அறக்கட்டளை நடத்தி வரும் புத்தக வங்கி மூலம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
கம்ப்யூட்டர் சயின்ஸ், பொறியியல், கலை, அறிவியல் மற்றும் வர்த்தகப் பாடநூல்கள் பல்வேறு கல்லூரிகளையும் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் டி.விஸ்வநாதன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலர் அசோக் கேடியா தமது வரவேற்புரையில், 2000த்திலிருந்து நடைபெறும் இந்த அறக்கட்டளை மூலம் பல்வேறு கல்லூரிகளையும் சேர்ந்த 50 ஆயிரம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். இதுவரை புத்தகங்ளை வாங்க 80 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 10 ஆயிரம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். இவர்கள் தேர்வு முடிந்ததும் இந்த புத்தகங்ளைத் திருப்பித் தந்து விட வேண்டும் என்றார்.