பாடை கட்டி இழுத்து பிரார்த்தனை சிதம்பரத்தில் நூதன நேர்த்திக்கடன்
பாடை கட்டி இழுத்து பிரார்த்தனை சிதம்பரத்தில் நூதன நேர்த்திக்கடன்
பாடை கட்டி இழுத்து பிரார்த்தனை சிதம்பரத்தில் நூதன நேர்த்திக்கடன்

சிதம்பரம்: சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் விழாவில், அம்மனை வேண்டி, பாடை கட்டி இழுத்தும், வயிற்றில் மா விளக்கு போட்டும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் பஸ் நிலையம் அருகே, சிறப்பு வாய்ந்த கீழத்தெரு மாரியம்மன் கோவில் உள்ளது.
வேண்டுதலின் பேரில், பாடை பிரார்த்தனை நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டியில் பச்சை தென்னை ஓலையில், வேப்ப இலைகளை போட்டு அதில் வேண்டுதலுக்குரிய நபரை படுக்க வைத்து, கோவிலைச் சுற்றி இழுத்து வருகின்றனர். இந்த பாடை பிரார்த்தனையில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, படுக்க வைத்து இழுத்துச் சென்றனர். தொடர்ந்து அங்கப்பிரதட்சணம், அலகு போடுதல், பால்காவடி, தீ மிதிப்பவர்களுக்கு காப்பு கட்டுதலும், மாலை சோதனை கரகம், அலகு தரிசனம், அக்னிசட்டி ஏந்தி வீதியுலா வருதல் ஆகியவை நடந்தன. அதனைத்தொடர்ந்து, மாரியம்மன் தீ குண்டத்திற்கு முன் எழுந்தருள செய்யப்பட்டு, ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.