/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை அரசு கலைக் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர் ஆகணுமா?கோவை அரசு கலைக் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர் ஆகணுமா?
கோவை அரசு கலைக் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர் ஆகணுமா?
கோவை அரசு கலைக் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர் ஆகணுமா?
கோவை அரசு கலைக் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர் ஆகணுமா?
ADDED : ஜூலை 13, 2011 02:19 AM
கோவை : கோவை அரசு கலைக் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர் பணியிடத்துக்கு விண்ணப்பங் கள் வரவேற்கப்பட்டுள்ளன.கல்லூரி முதல்வர்(பொறுப்பு) துரை கூறிய தாவது:கோவை அரசு கலைக் கல்லூரியில் அரசியல் அறிவியல், கணிதம், பொது நிர்வாகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதியான விரிவுரையாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படுபவர்கள், தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்படுவர். விரிவுரை யாளர் தகுதித் தேர்வுகளான (நெட், ஸ்லெட்) முடித்திருக்க வேண்டும்.பி.எச்.டி., கல்வித் தகுதி விரும்பத்தக்கது. பி.எச்.டி., ஆய்வுப் படிப்பு நிறைவு செய்யும் நிலையில் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை, 'முதல்வர்(பொ), அரசு கலைக் கல்லூரி, கோவை-18' என்ற முகவரிக்கு ஜூலை 15க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு, முதல்வர் துரை கூறினார்.


