பிரியாணி விருந்து கவுன்சிலர்கள் "குஷி'
பிரியாணி விருந்து கவுன்சிலர்கள் "குஷி'
பிரியாணி விருந்து கவுன்சிலர்கள் "குஷி'
ADDED : செப் 10, 2011 01:19 AM
போடி :தேனி மாவட்டம், போடி நகராட்சி கூட்டம் துணைத்தலைவர் சங்கர்(தி.மு.க.,) தலைமையில் நடந்தது.
கமிஷனர் முத்துராமேஸ்வரன், பொறியாளர் திருமலைவாசன், மேலாளர் பிச்சைமணி முன்னிலை வகித்தனர்.இக்கூட்டம் உள்ளாட்சி தேர்தலுக்கு முந்தைய கூட்டமாகும். 5 ஆண்டுகள் சுமூகமாக கூட்டம் நடத்த உதவிய கவுன்சிலர்களுக்கும், பணியாளர்களுக்கும் சங்கர் நன்றி தெரிவித்தார். இவர்களுக்கு சிக்கன், மட்டன் பிரியாணி விருந்து தந்தார். அ.தி.மு.க., உட்பட அனைத்து கட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர். விருந்தால் அவர்கள் 'குஷி'அடைந்தனர்.