Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தமிழக உள்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி கமிஷனர், 10 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்

தமிழக உள்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி கமிஷனர், 10 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்

தமிழக உள்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி கமிஷனர், 10 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்

தமிழக உள்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி கமிஷனர், 10 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்

UPDATED : ஜூலை 16, 2024 06:40 PMADDED : ஜூலை 16, 2024 02:10 PM


Google News
Latest Tamil News
சென்னை: தமிழக உள்துறை செயலாளர் அமுதா, வருவாய்த்துறை செயலராக மாற்றப்பட்டு உள்ளார். புதிய உள்துறை செயலாளராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.

தமிழகத்தில் பல துறைகளின் செயலாளர்களை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

செயலாளர்கள் மாற்றம்


*உள்துறை செயலாளர் அமுதா, வருவாய்த்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

*தகவல் தொழில்நுட்ப துறை செயலாளராக இருந்த தீரஜ்குமார் உள்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

*சென்னை மாநகராட்சி கமிஷனராக இருந்த ராதாகிருஷ்ணன் கூட்டுறவுத்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

*தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல்த்துறை செயலாளராக ராஜாராமும்

*பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை நலத்துறை செயலாளராக சுரேஷ்குமாரும்

*பள்ளி கல்வித்துறை செயலாளராக மதுமதியும்

*கால்நடை, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை செயலாளராக கோபாலும்

*பொதுமக்கள் மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளராக ரீட்டா ஹரீஸ் தக்கரும்

*மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆக சிகிதாமஸ் வைத்தியனும்

*புவியியல் மற்றும் சுரங்கத்துறை கமிஷனர் ஆக சரவண வேல்ராஜூம்

*பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் ஆக விஜயராஜ் குமாரும்

*மனித வளத்துறை செயலாளராக நந்தகுமாரும்

*அரசு செலவினத்துறை செயலாளர் ஆக நாகராஜனும்

*தமிழக சர்க்கரைத்துறை மேலாண் இயக்குநராக அன்பழகனும்

*வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை செயலாளராக பிரஜேந்திர நவ்நீத்தும்

*தமிழக வீட்டுவசதி வாரியத்துறை மேலாண் இயக்குநராக சமீரனும்

*தமிழக உள்கட்டமைப்பு வளர்ச்சி வாரிய தலைவராக பூஜா குல்கர்னியும்

*தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளராக வீரராகவ ராவும்

*தகவல் தொழில்நுட்பத்துறை கூடுதல் செயலாளராக குமார் ஜெயந்த்

*சிறப்பு முயற்சிகள் துறை செயலாளராக ஹர்சகாய் மீனாவும்

*தமிழக வழிகாட்டித்துறை செயலாளராக அலர்மேல்மங்கையும் நியமிக்கப்பட்டு உளளனர்.

இணைச்செயலாளர்


*பொதுத்துறை துணை செயலாளராக விஷ்ணு சந்திரனும்

*சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைச் செயலாளர் ஆக வளர்மதியும்

*உள்துறை இணைச்செயலாளராக ஆனி மேரியும்

*நிதித்துறை துணை செயலாளராக சி.ஏ.ரிஷப்

*வீட்டு வசதித்துறை இணைச் செயலாளராக ஸ்ரவன் குமார் ஜடாவத்

*சேலம் மாவட்ட ஊரக வேலைவாய்ப்பு ஆணைய மேலாண் இயக்குநராக லலிதாதியா நீலமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநகராட்சி கமிஷனர்கள் மாற்றம்


* பள்ளி கல்வித்துறை செயலாளர் குமரகுருபன் இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார்.

*ஈரோடு மாநகராட்சி கமிஷனராக நரன்வாரே மணிஷ் சங்கர் ராவும்

*தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் ஆக பாலசந்தரும்

*சென்னை மாநகராட்சி கல்விப்பிரிவு இணை கமிஷனராக விஜயாராணியும்

*சென்னை மாநகராட்சி இணை கமிஷனராக சிவகிருஷ்ணமூர்த்தியும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

10 மாவட்ட கலெக்டர்களும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.


*ராணிப்பேட்டை கலெக்டராக சந்திரகலாவும்

*புதுக்கோட்டை கலெக்டராக அருணாவும்

*நீலகிரி கலெக்டராக லஷ்மி பையா தன்னீரும்

*தஞ்சாவூர் கலெக்டராக பிரியங்காவும்

*நாகப்பட்டினம் கலெக்டராக ஆகாஷூம்

*அரியலூர் கலெக்டராக ரத்தினசாமியும்

*கடலூர் கலெக்டராக ஆதித்யா செந்தில்குமாரும்

*கன்னியாகுமரி கலெக்டராக அழகுமீனாவும்

*பெரம்பலூர் கலெக்டராக கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ்வும்

*ராமநாதபுரம் கலெக்டராக சிம்ரன்ஜீத் கலோனும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us