ஜப்பானில் சூறாவளி: 18 பேர் பரிதாப பலி
ஜப்பானில் சூறாவளி: 18 பேர் பரிதாப பலி
ஜப்பானில் சூறாவளி: 18 பேர் பரிதாப பலி

டோக்கியோ: ஜப்பானின் இரு தீவுகளை,'டலாஸ்' சூறாவளி தாக்கியதில், 18 பேர் பலியாகினர்.
ஜப்பானின் ஷிகோகு தீவு மற்றும் பிரதான ஹோன்ஷூ தீவு ஆகியவற்றை நேற்று,'டலாஸ்' சூறாவளி தாக்கியது. இதில், வகாயாமா மற்றும் நரா என்ற இரு மாகாணங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. சூறாவளி தாக்கும் என எச்சரிக்கை விடப்பட்டதால், ஐந்து லட்சம் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர். வகாயாமா மற்றும் நரா மாகாணங்களில், பல இடங்களில், கன மழை காரணமாக நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டன. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 18 பேர் பலியாகினர். 43 பேர் காணாமல் போயினர். இன்று ஜப்பானைக் கடந்து கிழக்கு ஜப்பான் கடலை நோக்கி, 'டலாஸ்' செல்லும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனினும் கன மழையும் அதனால் நிலச்சரிவும் ஏற்படலாம் என்றும், எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.