/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/திண்டிவனத்தில் நாளை ராமதாஸ் ஆர்ப்பாட்டம்திண்டிவனத்தில் நாளை ராமதாஸ் ஆர்ப்பாட்டம்
திண்டிவனத்தில் நாளை ராமதாஸ் ஆர்ப்பாட்டம்
திண்டிவனத்தில் நாளை ராமதாஸ் ஆர்ப்பாட்டம்
திண்டிவனத்தில் நாளை ராமதாஸ் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 01, 2011 01:29 AM
திண்டிவனம் : திண்டிவனத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.தமிழக அரசு சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்தாததை கண்டித்து பா.ம.க., சார்பில் நாளை(2ம் தேதி) மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
திண்டிவனம் தாலுகா அலுவலகம் முன்பு நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சிறப்புரை நிகழ்த்துகிறார்.
முன்னதாக காந்தியார் திடலிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக பா.ம.க., வினர் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன், மாநில துணை பொதுச் செயலாளர் கருணாநிதி, மாவட்ட செயலாளர் மலர் சேகர், நகர செயலாளர் ஜெயராஜ் பங்கேற்கின்றனர்.